தேசிய செய்திகள்

5 நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு செல்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள பழங்குடி சமூகத்தினருடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாடுகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு 5 நாள் பயணமாக வருகிற 19ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு செல்ல உள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இது அவருடைய முதல் தீவு பயணமாகும். வருகிற 19ம் தேதி பிற்பகல் 1 மணியாளவில் போர்ட் பிளேயரில் உள்ள ஐ.என்.எஸ். உட்க்ரோஷில் வரும் ஜனாதிபதியை அந்தமான் நிகோபார் தளபதி, ஏர் மார்ஷல் சாஜீ பாலகிருஷ்ணன் மற்றும் சில மூத்த அதிகாரிகள் ஆகியோர் வரவேற்கின்றனர்.

5 நாள் பயணத்தில் ஜனாதிபதி அந்தமானில் உள்ள செல்லுலார் சிறை, ஹேவ்லாக் தீவுகள், கேம்ப்பெல் விரிகுடா ஆகிய தீவுகளுக்குச் சென்று பல்வேறு சமூகங்கள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடுகிறார். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் பற்றிய திரைப்பட விளக்கக்காட்சியை பார்வையிடுகிறார். மேலும் பழங்குடி சமூகத்தினருடனும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாடுகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அந்தமான் நிகோபார் தீவுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்