தேசிய செய்திகள்

ஜனாதிபதி கோவிந்த் அரியானா வருகை; முதல்-மந்திரி, கவர்னர் வரவேற்பு

அரியானாவுக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய குடியரசு தலைவரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று முதல் 2 நாட்களுக்கு பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அவர் பஞ்சாப்பின் சண்டிகாரில் அமைந்துள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் இன்று கலந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து அரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள சூய் கிராமத்திற்கு சென்று பொதுமக்களுக்கான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக சண்டிகாருக்கு இன்று வருகை தந்துள்ளார். அவரை அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் மற்றும் கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் வரவேற்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்