கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாள் வெளிநாடுகள் பயணம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆப்பிரிக்க கண்டத்துடனான இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை (சனிக்கிழமை) தொடங்கி 6 நாட்கள் அவர் அங்கோலா மற்றும் போட்ஸ்வானா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். இந்த நாடுகளுக்கு இந்திய தலைவர் செல்லும் முதல் பயணம் இதுவாகும்.

8-ந் தேதி அங்கோலா செல்லும் அவர், 13-ந் தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார். நாடாளுமன்றத்தில் உரையாற்றவும், அங்கு வசிக்கும் இந்திய சமூக உறுப்பினர்களுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

பின்னர் அங்கிருந்து போட்ஸ்வானா செல்லும் திரவுபதி முர்மு, 13-ந் தேதி வரை அங்கு முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அங்கு இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கிறார்கள்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து