தேசிய செய்திகள்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற 26-ந் தேதி முதல் 4 நாட்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர், லக்னோவில் உள்ள ராஜ்பவனில் தங்குவார்.

தினத்தந்தி

ஆகஸ்டு 26-ந் தேதி லக்னோ அம்பேத்கர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பார்.27-ந் தேதி, சைனிக் பள்ளி வைர விழாவிலும், 28-ந் தேதி கோரக்பூரில் நடைபெறும் முதல் ஆயுஷ் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்துகொள்வார்.29-ந் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கு முதல் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் செல்வார். அங்கு வழிபாடு மேற்கொள்ளும் அவர், அன்றைய தினமே டெல்லி திரும்புவார்.

ஜனாதிபதி பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளிலும் மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொள்வர்.ஜனாதிபதி ராம்நாத் செல்லும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பு ஒத்திகைகள் துவங்கியுள்ளன.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு