தேசிய செய்திகள்

இந்தியாவை பாதுகாத்தவர்களின் துணிச்சலுக்கு தலைவணங்குவோம்: ஜனாதிபதி

கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாட்டை பாதுகாத்தவர்களுக்கு தலைவணங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காஷ்மீர் எல்லையில் உள்ள கார்கில் பகுதியை, கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் படையினர் ஆக்கிரமித்தனர். அப்போது பாகிஸ்தான் துருப்புகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி, விரட்டியடித்தது.

இந்த போரின்போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், இந்தியாவை பாதுகாத்தவர்களின் துணிச்சலுக்கும் வீரத்துக்கும் தலை வணங்குவோம். 1999- கார்கில் போரில் ஆயுதப்படைகள் தீரத்துடன் போரிட்டு வென்றன என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்