தேசிய செய்திகள்

உ.பி. முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் மறைவு - ஜனாதிபதி இரங்கல்

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங் மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

உடல்நலக்குறைவு காரணமாக உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் (89) இன்று காலமானார்.

கல்யாண் சிங் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1992 வரையிலும், 1997 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை உத்தரப்பிரதேச மாநில முதல்-மந்திரியாக இருந்தார். மேலும் அவர் ராஜஸ்தான் மாநில கவர்னராகவும் செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில், கல்யாண் சிங் மறைவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள பதிவில், கல்யான் சிங் மக்களுடன் மந்திர இணைப்பை பெற்றுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் முதல்-மந்திரியாக, அவர் தூய்மையான அரசியலையும், குற்றவாளிகள் மற்றும் ஊழலையும் தூய்மைப்படுத்தினார். அவர் வகித்த அலுவலகங்களை அவர் கண்ணியப்படுத்தினார். அவரது மறைவு பொது வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை விட்டுச்செல்கிறது. எனது ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்