தேசிய செய்திகள்

நாளை 72-வது சுதந்திர தினம்: ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று உரை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழா புதன்கிழமை கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஜனாதிபதி மாளிகையில் இருந்து நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் துர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றுகிறார்.

முதலில் இந்தியிலும், அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திலும் உரையாற்றுகிறார். பின்னர் அந்தந்த மாநில மொழிகளில் ஜனாதிபதி உரை மொழி மாற்றம் செய்து இரவு 8 மணியளவில் ஒளிபரப்பப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை