காந்திநகர்,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று (வியாழக்கிழமை) குஜராத் செல்கிறார்.
அங்கு அவர், இந்த ஆண்டு நாடு 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதை குறிக்கும் விதமாக மாநில சட்டசபையில் இன்று காலை உரையாற்றுகிறார். காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சட்டசபையில் உரையாற்றுவார் என சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து, நாளை ஜாம்நகரில் நடைபெறும் விழாவில் இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் வல்சுரா'வுக்கு ஜனாதிபதியின் வண்ணம்' விருதை ராம்நாத் கோவிந்த் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி மற்றும் போரின்போது நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், ராணுவப் பிரிவுக்கு ஜனாதிபதியின் வண்ணம் விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் கடற்படை வீரர்களின் அணுவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ராம் நாத்கோவிந்த் ஏற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.