ஐதராபாத்,
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்த்தில் உள்ள எடபெட்டா பகுதியில் ரூ.116 கோடி செலவில் 400 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. இதன் திறப்பு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கிறார். மருத்துவ கல்லூரி மருத்துவனை திறப்பு விழாவுக்காக அடுத்த மாதம் 7 அல்லது 9-ந்தேதி ராம்நாத் கோவிந்த் சாம்ராஜ்நகர் வர உள்ளார். ஜனாதிபதி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.