புதுடெல்லி,
ஜனாதிபதி தேர்தல், அடுத்த மாதம் 17ந் தேதி நடக்கிறது. அதில், எதிர்க்கட்சிகளுடன் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தி, பொது வேட்பாளரை அறிவிக்கும் முயற்சியில் பா.ஜனதா ஈடுபட்டுள்ளது. வேட்புமனு தாக்கல், 28ந் தேதி முடிவடையும் நிலையில், பா.ஜனதா வேட்பாளர் பெயர், விரைவில் அறிவிக்கப்படுகிறது.
வேட்பாளரை 50 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். அதே எண்ணிக்கையில் வழிமொழிய வேண்டும். இதற்காக, தலா 120 பேர் அடங்கிய 4 பட்டியலை பா.ஜனதா தயார் நிலையில் வைத்துள்ளது. இவர்களில், மத்திய மந்திரிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், சுயேச்சை எம்.பி.க்கள் ஆகியோரும் அடங்குவர்.
இந்நிலையில், இந்த பணி குறித்து விவாதிக்க பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம், நாளையும், நாளைமறுநாளும் நடைபெறுகிறது. அதில், வேட்பாளரை முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் குறித்த நடைமுறைகள் குறித்து எம்.பி.க்களுக்கு விளக்கி கூறப்படும் என்று தெரிகிறது. அத்துடன், பா.ஜனதா ஆட்சி மன்றக்குழுவும் விரைவில் கூடுகிறது.