தேசிய செய்திகள்

வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தது ஏமாற்றம் அளிக்கிறது - சிரோமணி அகாலிதள தலைவர் கருத்து

வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தது ஏமாற்றம் அளிப்பதாக, சிரோமணி அகாலிதள தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்தார். அத்துடன் காஷ்மீர் மாநிலத்தின் அலுவல் மொழிகளின் பட்டியலில் உருது, ஆங்கிலத்துடன் காஷ்மீரி, டோக்ரி, இந்தி ஆகியவற்றையும் சேர்க்க வகை செய்யும் மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்தார். இந்த மசோதாவும் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதல் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தது மிகவும் துரதிருஷ்டமானது என்றும், சோகமும், ஏமாற்றமும் அளிப்பதாகவும் கூறி உள்ளார்.

அத்துடன் இது தேசத்தின் இருண்ட நாள் என்றும், சிரோமணி அகாலிதளமும், மற்ற எதிர்க்கட்சிகளும் கேட்டுக்கொண்டபடி மறுபரிசீலனை செய்யுமாறு அந்த மசோதாக்களை ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு திருப்பி அனுப்பிவைப்பார் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு