ஜெய்பூர்,
ராஜஸ்தானிலுள்ள ஜெய்பூர் மற்றும் அஜ்மீர் ஆகிய நகரங்களில் 2 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த். இதற்காக ஜெய்பூர் நகருக்கு அவர் நேற்று வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் ஒன்றில் ஜெய்பூர் நகரில் இருந்து அஜ்மீர் நகருக்கு அவர் இன்று சென்றார். அங்கிருந்து புஷ்கர் சென்ற அவர் பிரம்மன் கோவிலில் வழிபட்டார்.
அதன்பின்னர் அஜ்மீர் நகரில் உள்ள சுபி துறவியான கிவாஜா மொய்னுதீன் சிஸ்டியின் தர்காவுக்கும் அவர் இன்று செல்கிறார்.