உடுப்பி
தங்களக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால் வன்முறையில் ஈடுபடுவோரை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டித்தார்.
பல நேரங்களில் மருத்துவமனைகளில் மரணிக்கும் தங்களக்கு நெருக்கமானவர்களின் பிரிவை பொறுக்க இயலாமல் வன்முறையில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. எந்தவொரு நாகரிக சமுதாயமும் இது போன்ற வன்முறைகளை ஏற்றுக்கொள்ளாது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.
கோயில் நகரமான உடுப்பியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்தகைய வன்முறைகள் கண்டிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
உங்களால் ஒரு மருத்துவரை நம்ப இயலாது என்றால், யாரை நீங்கள் நம்பப் போகிறீர்கள்? என்று கேட்டார் அவர். எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள் சென்றடைய வேண்டும்; குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களால் மருத்துவ வசதிகள் சென்றடைய வேண்டும். அவர்களால் அவ்வசதிகளை பெற முடிகிற அளவில் கட்டணங்கள் இருக்க வேண்டும்.
ஒரு மருத்துவருக்கு 1700 மக்கள் எனும் விகிதாச்சாரம் தவறான வழியையே காட்டுகிறது என்றும், பல மருத்துவர்கள் நகரப்பகுதிகளிலேயே மருத்துவசேவைகளை அளித்து வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.