தேசிய செய்திகள்

‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்க பிரதமர் மோடி அழைப்பு

மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான மனதின் குரல் நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி ஒலிபரப்பாகிறது. இந்த நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், இந்த மாதத்தின் மனதின் குரல்' நிகழ்ச்சி பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும். எப்போதும் போல், அதற்கான உங்கள் ஆலோசனைகளைப் பெற ஆவலாக உள்ளேன். அவற்றை @mygovindia அல்லது நமோ செயலியில் பகிரவும். 1800-11-7800 என்ற எண்ணுக்கு அழைத்தும் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு