புதுடெல்லி,
சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி பராக் ஒபாமா விரைவில் குணமடைய அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'நீங்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைவாக மீண்டு வருவதற்கும் உங்கள் குடும்பத்தின் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காகவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.