தேசிய செய்திகள்

தென் கொரியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தென் கொரியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தென் கெரியா நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங்குக்கும், மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த யூன் சுக்கிற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யூன் சுக் 48.59 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடும் போட்டியாக விளங்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் லீ ஜே மியுங் 47.80 சதவீதம் வாக்குகள் பெற்றார்.

இந்நிலையில் தென் கொரியாவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள யூன் சுக்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா - தென்கொரியா உறவை மேலும் வலுப்படுத்தவும், விரிவுப்படுத்தவும் இணைந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்