தேசிய செய்திகள்

குறைவாக தடுப்பூசி போட்டுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி 3-ந் தேதி ஆலோசனை

குறைவாக தடுப்பூசி போட்டுள்ள மாவட்ட கலெக்டர்களுடன் பிரதமர் மோடி 3-ந் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதியன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. முதல்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் அதன்பின்னர், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் 106 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆனாலும் நாட்டில் ஜார்கண்ட், மணிப்பூர், நாகலாந்து, அருணாசலபிரதேசம், மராட்டியம், மேகாலாயா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முதல் டோஸ் தடுப்பூசி 50 சதவீதத்துக்கும் கீழாகவே போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த மாவட்டங்களின் கலெக்டர்களுடன் பிரதமர் மோடி நாளை மறுதினம் (3-ந் தேதி) ஆலோசனை நடத்துகிறார். இதில் தொடர்புடைய மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்துகொள்கிறார்கள். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு