புதுடெல்லி,
மழை வௌளத்தில் சிக்கி கேரளா தத்தளித்து வரும் நிலையில், பிரதமர் மோடி நேற்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாநிலத்தின் வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், கேரளாவில் மழை மற்றும் நிலச்சரிவு சம்பவங்களால் எழுந்துள்ள சூழல் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயனுடன் பேசினேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக அதிகாரிகள் களப்பணியாற்றி வருகின்றனர். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
கனமழை மற்றும் நிலச்சரிவுக்கு சிலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.