தேசிய செய்திகள்

ரஷிய அதிபர் புதினுடன் இன்று பேசுகிறார் பிரதமர் மோடி ..!

ரஷிய அதிபர் புதினுடன் இன்று தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசுகிறார்.

புதுடெல்லி,

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமர் புதினுடன் இன்று தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி பேசுகிறார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக புதினுடன் பிரதமர் மோடி பேச உள்ளார் என கூறப்படுகிறது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு