தேசிய செய்திகள்

மழைக்கால நோய்கள் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

மழைக்கால நோய்கள் குறித்து நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரதமர் மோடி தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்த நாட்களில் தொற்று நோய்களில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், வெப்ப மண்டல நோய்கள் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் காலம் இது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழலை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. பாதுகாப்பாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை