புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி கடந்த திங்கட்கிழமை அவையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவை இந்திய ராணுவம் எதிர்கொண்டது பற்றி நரவானே எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்ட சில விசயங்களை பற்றி பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால், அவை நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.
தொடர்ந்து பல்வேறு முறை அவையில் அமளியும், கூச்சலும் எழுந்து, நாள் முழுவதற்கும் அவை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தி அவையின் விதிகளை மீறுகிறார் என பா.ஜ.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், சீன ராணுவம் நம்முடைய எல்லைக்குள் நுழைந்த முக்கிய தருணத்தில், ராணுவ தலைமை தளபதியோ காத்திருக்க வைக்கப்படுகிறார். ஒரு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்தபோது, பிரதமரோ, நீங்கள் எது சரியென நினைக்கிறீர்களோ அதனை செய்யுங்கள் என கூறுகிறார்.
நாட்டின் பாதுகாப்பில் மிக தீவிர நெருக்கடியான நேரத்தில், அரசியல்தனத்துடன் தன்னுடைய கையை பிரதமர் மோடி உயர்த்துகிறார். அதுபற்றி ராணுவ தலைமை தளபதி நரவானே எழுதும்போது, ராணுவத்தை அரசியல் தலைமை தனித்து விட்டு விட்டது என உணர்ந்தேன் என குறிப்பிட்டு உள்ளார்.
இந்த உண்மையை பேச விடாமலே என்னை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தடுத்து வருகின்றனர். நாடு கேள்விகளை கேட்டு கொண்டிருக்கிறது. ஆனால், அரசோ பதிலளிக்காமல் தப்பியோடுகிறது என பரபரப்பாக பதிவிட்டு உள்ளார்.
இந்த நிலையில், மூத்த ராணுவ வீரர் மற்றும் பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளராள பிரிகேடியர் அனில் குப்தா (ஓய்வு) ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து உள்ளார். அவர் கூறும்போது, ஆயுத படைகளின் செயல்பாடுகளை ராகுல் காந்தி எந்தளவுக்கு தரம் குறைந்த அளவில் புரிந்து வைத்திருக்கிறார் என அவருடைய பேச்சு பிரதிபலிக்கிறது.

அரசியல் விவாதத்திற்கு உள்ளே ஆயுத படைகளை இழுக்கிறார் என குற்றம் சாட்டிய குப்தா, இதுபோன்ற பேச்சுகள் தவறாக வழிகாட்டுபவை என்றார்.
இதற்கு எடுத்துக்காட்டாக கடந்த காலங்களில் கார்கிலில் எதிரிகளின் பதுங்கு குழிகள் அழிப்பு, வேறொரு நாட்டின் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது போன்ற சம்பவங்களை அவர் குறிப்பிட்டு பேசினார். அப்போது எல்லாம் எந்த பிரதமரையும் கேட்டு விட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ராணுவ தளபதியின் உத்தரவின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.