தேசிய செய்திகள்

அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா - பிரதமர் மோடி வழங்கினார்

அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை பிரதமர் மோடி வழங்கினார்.

கவுகாத்தி

அசாம் மாநிலம் சிவசாகரில் நடைபெற்ற விழாவில் மனைகளுக்கான பட்டாக்களை பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 2.28 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது.

விழாவில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-

அசாமிய மொழியைப் பாதுகாத்தல் மற்றும் அதன் இலக்கியங்களை மேம்படுத்துதல், அசாமிய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதை கொள்கையாக பா.ஜனதா அரசு கொண்டுள்ளது.

கொரோனா தொற்றை அசாம் அரசாங்கம் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. தடுப்பூசி இயக்கத்தை அசாம் இப்போது முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அசாமின் விரைவான வளர்ச்சி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் பயனைப் பெற்றுள்ளனர்.

மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க மத்திய - மாநில அரசுகள் அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றன என கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு