தேசிய செய்திகள்

பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியிலான பாதைக்கு திரும்ப வேண்டும் - குவாட் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான பாதையின் முக்கியத்துவம் குறித்து குவாட் மாநாட்டில் மோடி வலியுறுத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு குவாட் ஆகும்.

இந்நிலையில் குவாட் தலைவர்களின் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இந்திய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான பாதையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். ஐநா சாசனத்தை கடைபிடிப்பது, பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை அளிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார் என இந்திய பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்