டேராடூன்,
உத்தரகாண்டில் இன்று முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், ரெட் அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
இதேபோன்று, கடந்த 17ந்தேதி முதல் வருகிற 19ந்தேதி வரை ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. இதுபற்றி உத்தரகாண்ட் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மையம், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில கனமழை பாதிப்புகள் குறித்து முதல்-மந்திர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மாநில அமைச்சர் அஜய் பாத் உடன் பிரதமர் மோடி ஆலோசனை இன்று நடத்தினார். அப்போது மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.