தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக்கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக்கூட்டம் நடைபெற உள்ளது. #PMmodi #CabinetMeeting

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

நீர்வளத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள திட்ட வரைவின் அடிப்படையில் ஆலோசனை நடைபெறலாம் என கூறப்படுகிறது. காவிரி விவகாரத்தில் உள்துறை மற்றும் சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஆலோசித்து இறுதி முடிவு இந்த கூட்டத்தில் எடுப்பட வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.