தேசிய செய்திகள்

அனில் அம்பானியின் ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அமலாக்கத்துறையால் இதுவரை சட்டப்படி முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு, தற்போது ரூ.9,000 கோடியாக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக கோடிக்கணக்கான புதிய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த வழக்கில் முன்னதாக ரூ.7,500 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிறப்பித்த புதிய உத்தரவின் கீழ் ரூ.1,400 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் இதுவரை சட்டப்படி முடக்கப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு, தற்போது ரூ.9,000 கோடியாக உயர்ந்துள்ளது.

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி