தேசிய செய்திகள்

டெல்லியில் மிக மோசமடைந்த பிரிவில் நீடிக்கும் காற்று தர குறியீடு

டெல்லியில் வாகன பெருக்கம், தொழிற்சாலை கழிவுகளால் காற்று தர குறியீடு தொடர்ந்து மிக மோசமடைந்த பிரிவில் நீடிக்கிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் அண்டை மாநிலங்களில் இருந்து எரிக்கப்படும் விவசாய கழிவுகளால் காற்று மாசு அதிகரிக்கிறது என புகார் எழுந்தது. தொடர்ந்து பழைய வாகனங்களின் பெருக்கம், தொழிற்சாலை கழிவுகளால் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்தது.

எனினும், கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நீர்நிலைகள் தெளிவுடன் காணப்பட்டன. காற்றில் மாசு அளவு குறைந்து காற்றின் தரமும் உயர்ந்தது. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தொடர்ந்து, காற்றின் தரமும் மோசமடைந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தினால் தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் குறைந்த வேகத்திலேயே இயங்குகின்றன.

டெல்லியில் ஒட்டு மொத்த காற்று தர குறியீடு 325 என்ற அளவில் உள்ளது. இதனால், காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமடைந்த பிரிவில் நீடிக்கிறது. இதனை காற்று தரம் மற்றும் பருவநிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்து உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு