தேசிய செய்திகள்

வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடை கேட்டு வழக்கு; தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளாகளுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயலாகும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக பல்வேறு திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கின்றன. இதில் வாக்காளர்களை கவர இலவசங்களையும் அறிவிக்கிறார்கள். இந்த நிலையில், தேர்தலில் இலவசங்களை அறிவிக்க தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான பொது நல மனுவை பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த வக்கீல் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்தார்.

இலவசங்களை அறிவிப்பது அரசியல் கட்சிகள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வாக்காளாகளுக்கு லஞ்சம் கொடுப்பது போன்ற செயலாகும். ஜனநாயக நடைமுறைகளை பாதுகாக்க இதுபோன்ற நடைமுறைகள் தவிக்கப்பட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் மக்களுக்கு இலவசங்களை அறிவிப்பது தேர்தலின் நேர்மையை பாதிக்கும் தீவிரமான பிரச்னை. இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்கக் கோரி தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்