புதுடெல்லி,
பசுப் பாதுகாவலர்கள் ஒருபோதும் கொலைகாரர்களாக இருக்கமாட்டார்கள் என்று விஷ்வ இந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு தெரிவித்தது.
பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்நாட்டில் சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது எனவும் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் கொலை செய்வதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் பேசுகையில் கூறியதாவது: தேசப்பிதா மகாத்மா காந்தி, விடுதலை போராட்ட வீரர் வினோபா பாவே ஆகிய இரு தலைவர்களுமே பசுக்களைப் பாதுகாப்பதற்காக கடுமையானச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று விரும்பினர்.
அவர்களின் வார்த்தைகளைப் பின்பற்றி, பசுக்களைப் பாதுகாப்பதற்காக கடுமையானச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்பதுடன், அந்தச் சட்டத்தை அமல்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும். பசுப் பாதுகாவலர்கள் பாதுகாவலர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் எவ்வாறு கொலைகாரர்களாக இருக்க முடியும்?கொலைகாரர்கள் பாதுகாவலர்களாக இருக்க முடியாது என்றார்.