தேசிய செய்திகள்

பி.எஸ்.எல்.வி.-சி50 ராக்கெட்டை வரும் 17ந்தேதி விண்ணில் ஏவ திட்டம்: இஸ்ரோ அறிவிப்பு

பி.எஸ்.எல்.வி.-சி50 ராக்கெட்டை வருகிற 17ந்தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வருகிற 17ந்தேதி பி.எஸ்.எல்.வி.-சி50 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்து உள்ளது.

இந்த ராக்கெட்டானது, தட்பவெப்ப நிலையை கவனத்தில் கொண்டு அன்று மாலை 3.41 மணியளவில் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் சி.எம்.எஸ்.-01 என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை உடன் சுமந்து செல்லும். இந்திய பகுதி, அந்தமான் மற்றும் நிகோபர், லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நீட்டிக்கப்பட்ட-சி பேண்ட் அலைக்கற்றை சேவைகளை வழங்குவதற்கான நோக்கில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது இந்தியாவின் 42வது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் ஆகும்.