தேசிய செய்திகள்

பொதுத்துறை வங்கி அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தம்

பொதுத்துறை வங்கி அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் வங்கிப்பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சம்பள உயர்வு கேட்டும், பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுத்துறை வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனம் விடுத்துள்ள அழைப்பின்படி நடக்கிற இந்த வேலை நிறுத்தத்தால் வங்கிப்பணிகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தனியார் வங்கிச் சேவைகள் வழக்கம் போல கிடைக்கும்.

மேலும், நாளை 22-ந் தேதி 4-வது சனிக்கிழமை, நாளை மறுதினம் 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவ்விரு நாட்களும் வங்கி விடுமுறை நாட்கள் ஆகும். 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வங்கிகளுக்கு விடுமுறை.

இடையே 24-ந் தேதி திங்கட்கிழமை பொதுத்துறை வங்கிகள் வழக்கம் போல இயங்கும்.

26-ந் தேதி புதன்கிழமையன்று வேலை நிறுத்தம் செய்ய 9 முன்னணி வங்கி சங்கங்களின் கூட்டு அமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. எனவே அன்றும் வங்கிச்சேவை பாதிக்கும்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...