தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு மறுதேர்வு முடிவுகள் வெளியானது; 37.08 சதவீதம் பேர் தேர்ச்சி

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு மறுதேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 37.08 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு:

மறுதேர்வு முடிவு

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 18-ந் தேதி வெளியானது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சத்து 83 ஆயிரத்து 563 பேர் எழுதி இருந்தனர். அதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 966 பேர் வெற்றி பெற்றனர்.

2 லட்சத்து 60 ஆயிரத்து 597 இந்த தோவில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு இருந்தது. இந்த மறுதேர்வை 1 லட்சத்து 75 ஆயிரத்து 905 மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலையில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு மறுதேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

37.08 சதவீதம் பேர் தேர்ச்சி

இந்த தேர்வை எழுதிய 1 லட்சத்து 75 ஆயிரத்து 905 பேரில் 65 ஆயிரத்து 233 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களில் 36 ஆயிரத்து 637 பேர் மாணவிகள். 28 ஆயிரத்து 596 பேர் மாணவர்கள் ஆவார்கள். 1 லட்சத்து 10 ஆயிரத்து 672 பேர் மீண்டும் தோல்வி அடைந்து உள்ளனர். மாணவர்கள் 34.91 சதவீதம் பேரும், மாணவிகள் 40.30 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். ஒட்டுமொத்தமாக 37.08 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளார்கள்.

அறிவியல் பாட பிரிவில் 43.76 சதவீதம் பேரும், கலை பிரிவில் 34.66 சதவீதம் பேரும், வணிக பிரிவில் 34.64 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை http://www.karresults.nic.in என்ற இணைய முகவரியில் பார்த்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து