தேசிய செய்திகள்

புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தீபாவளி வாழ்த்து

'சுய சார்பு இந்தியா' கொள்கையை பின்பற்றி தீபாவளியை கொண்டாடுவோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகை வரும் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை நெருங்கி வரும் சூழலில் புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களைகட்டி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "பிரதமரின் 'சுய சார்பு இந்தியா' கொள்கையை பின்பற்றி தீபாவளியை கொண்டாடுவோம். தீபாவளி பண்டிகை அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது