தேசிய செய்திகள்

புதுச்சேரியில் ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

புதுச்சேரியில் ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு முதல் அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆய்வு பணிகளில் ஈடுபடும்பொழுது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அரசு பொறுப்பேற்காது என கூறினார்.

ஆனால், தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வேன் என கூறிய கிரண்பேடி, ஆய்வுக்கு செல்லும் முன் போலீசாரிடம் தகவல் தெரிவித்து விட்டு செல்கிறேன் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், பிள்ளையார்குப்பத்தில் ஆய்வு பணி மேற்கொள்ள சென்ற ஆளுநர் கிரண்பேடியை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றுள்ளனர்.

இலவச அரிசி உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு கிரண்பேடி தடையாக இருக்கிறார் என அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ஆளுநரை முற்றுகையிட முயன்ற 50க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு