தேசிய செய்திகள்

புதுச்சேரி கவர்னரின் சிறப்பு அதிகாரம் தொடர்பான மனு - சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

புதுச்சேரி கவர்னரின் சிறப்பு அதிகாரம் தொடர்பான மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

புதுச்சேரி கவர்னரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 30-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து கவர்னர் கிரண் பெடி தாக்கல் செய்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கவர்னர் கிரண் பெடி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த புதிய மனு ஒன்றில், புதுச்சேரி அரசு, அதிகாரிகளை மிரட்டும் தொனியில் சமீபத்தில் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் அதிகாரிகள் இடையே ஒருவகையான மிரட்சி நிலவுவதால் அரசு பணிகள் தடைபட்டுள்ளன. எனவே, கவர்னர் அதிகாரம் தொடர்பான சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு முன்பிருந்த நிலையே தொடரும்வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய விடுமுறை அமர்வு முன்பு கிரண் பெடி தரப்பில் நேற்று இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனுவை நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை