புதுடெல்லி,
கேரளம், அசாம், ஆகிய 2 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
இந்த 3 மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. காலையில் இருந்தே மக்கள் வாக்கு சாவடிக்கு திரண்டு வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தார்கள்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. இன்று பதிவான வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்த்நிலையில், புதுச்சேரி, கேரளம், அசாம் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு சதவீதம் வெளியாகி உள்ளது.
* புதுச்சேரி (30 தொகுதிகள்): 89.08 சதவீதம் வாக்குப்பதிவு
* கேரளா (140 தொகுதிகள்): 77.38 சதவீதம் வாக்குப்பதிவு
* அசாம் (126 தொகுதிகள்): 85.10 சதவீதம் வாக்குப்பதிவு
புதுச்சேரியில் வரலாறு காணாத அளவில் 89.08 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளது. புதுச்சேரியில் கடந்த தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இம்முறை சுமார் 7 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2006-ம் ஆண்டு 86 சதவீதம் வாக்குகள் பதிவாகின.2011-ல் 85.52 சதவீதம், 2016-ல் 85.06 சதவீத வாக்குகள் பதிவாகின.