தேசிய செய்திகள்

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு...!

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிடி ஸ்கேன் அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

காரைக்கால், 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையின் சிடி ஸ்கேன் அறையின் சிமெண்ட் மேற்கூரை இன்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்ததால், அதன் கீழே இருந்த குளிரூட்டப்பட்ட அறைக்கான தர்மாகோல் மேற்கூரை சிடி ஸ்கேன் மேல் இடிந்து விழுந்தது.

அப்போது சிடி ஸ்கேன் அருகே துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள், அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

சிடி ஸ்கேன் அறையில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...