தேசிய செய்திகள்

புனே கார் விபத்து வழக்கு; கைதான சிறுவனுக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன்

புனே கார் விபத்து வழக்கில் கைதான சிறுவனுக்கு மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் புனேவில் கடந்த மாதம் 19-ந்தேதி சொகுசு கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஐ.டி. ஊழியர்கள் அஷ்விணி கோஷ்டா மற்றும் அணீஷ் அவாதியா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிவேகமாக காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய மைனர் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அந்த சிறுவனுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில், சிறார் நீதி வாரியம் அந்த சிறுவனை காவலில் எடுத்தது. இதனை எதிர்த்து அந்த சிறுவனின் குடும்பத்தினர் தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து