கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம்: ரூ.27 லட்சம் பறிமுதல்

டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது அவர்கள் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.

தினத்தந்தி

புனே,

மராட்டிய மாநிலம் புனே நகரில் காலேவாடி பகுதியில், ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள ஒரு வீடு ஒன்றில் சோதனை நடத்திய போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.27 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த கும்பல் சனிக்கிழமை இரவு பிடிபட்டது.போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். போலீசார் விரட்டி சென்று 3 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடினார்.

டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது அவர்கள் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.அவர்களிடம் இருந்து 8 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு