தேசிய செய்திகள்

பஞ்சாப்: 16 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்கள் உள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், மொஹாலியில் உள்ள 16 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. 16 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டு மாணவ, மாணவியர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பள்ளிகளில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.