தேசிய செய்திகள்

பஞ்சாப்: சாலை விபத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் காயம்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கரம்பீர் சிங் குமான் பயணம் செய்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது.

தினத்தந்தி

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் தசுயா தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கரம்பீர் சிங் குமான், தனது காரில் தல்வாரா பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அந்த காரில் அவரது உதவியாளர், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர், ஓட்டுநர் உள்பட மொத்தம் 5 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் ஹோஷியார்பூரில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள கோக்ரா கிராமம் அருகே கரம்பீர் சிங்கின் கார் மின்கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் காயமடைந்த 5 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு தசுயா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு