தேசிய செய்திகள்

காங்கிரஸ் மேலிட குழுவுடன் பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் சந்திப்பு

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மேலிட குழுவை பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் சந்தித்து பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல் மந்திரி அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரையும் சமரசம் செய்ய, காங்கிரஸ் மேலிட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலர் ஹரிஷ் ராவத், முன்னாள் எம்.பி., அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு அதன் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அனுப்பியது. அதில், அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என,தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று அமரீந்தர் சிங், காங்கிரஸ் மேலிட குழுவை மீண்டும் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பஞ்சாப் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்