தேசிய செய்திகள்

போதை பொருள் கடத்தல் : ராஜ்நாத் சிங்கிற்கு பஞ்சாப் முதல்-மந்திரி அமீர்ந்தர் சிங் வலியுறுத்தல்

அண்டை மாநிலங்களில் இருந்து போதைபொருள் கடத்தி வருவதை தடுக்க வேண்டும் என்று ராஜ்நாத் சிங்கிற்கு பஞ்சாப் முதல்-மந்திரி அமீர்ந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். #AmarinderSingh #RajnathSingh

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருள் கடத்துவது, விற்பனை செய்வது போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க பஞ்சாப் காங்கிரஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் பஞ்சாப்பில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க அரசு முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

போதைப் பழக்கத்தை ஒழிக்கும் வகையில் போலீசார் உள்ளிட்ட அனைவருக்கும் சோதனையை மேற்கொள்ள அம்மாநில முதல்-மந்திரி அமீர்ந்தர் சிங் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கிற்கு அமீர்ந்தர் சிங் கடிதம் எழுதி உள்ளார். அதில் அண்டை நாடுகளான அரியானா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் போதை மருந்துகளை தடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.

போதை பொருளை எதிர்த்து போராட மாநில அரசிற்கு மத்திய அரசு உதவ வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் போதை பொருட்களை பி.எஸ்.எப் படையினர் கடுமையான பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்