சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து பகவந்த் மான் பஞ்சாப் மாநில முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசுவதற்காக பகவந்த் மான் இன்று டெல்லி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பதவியேற்பு நடைபெறும் நாள் குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் நாளை கவர்னரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோர இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பதவியேற்பு விழாவானது, சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் சொந்த கிராமமான கத்கர் கலனில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.