தேசிய செய்திகள்

விவசாய அமைப்புகள் சார்பில் கட்சி: பஞ்சாப் அரசியலில் புதிய திருப்பம்

புதிய அரசியல் கட்சிக்கு பல்பீர் சிங் ராஜேவால் தலைமை தாங்குகிறார். கட்சியின் முதல் மந்திரி வேட்பாளராகவும் இவரே முன் நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சண்டிகர்,

பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் தேர்தலில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ், முன்னாள் முதல் மந்திரி அமரிந்தர் சிங்கின் லோக் பஞ்சாப் காங்கிரஸ்- பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய திருப்பமாக 22 விவசாய அமைப்புகள் சார்பில் என்ற புதிய கட்சி துவங்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் ஒரு அங்கமாக இருந்த சுமார் 22 விவசாயிகள் சங்கங்கள், ஒன்றாக இணைந்து பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற அரசியல் கட்சியை தொடங்கி போட்டியிட முடிவு செய்துள்ளன.

இந்த புதிய அரசியல் கட்சிக்கு பல்பீர் சிங் ராஜேவால் தலைமை தாங்குகிறார். கட்சியின் முதல் மந்திரி வேட்பாளராகவும் இவரே முன் நிறுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்