தேசிய செய்திகள்

பஞ்சாபில் ஆட்சியை பிடிக்கும் ஆம் ஆத்மி! பின்னடைவை சந்தித்த முக்கிய தலைவர்கள்!!

துரி தொகுதியில் போட்டியிடும் பகவந்த் மான் ஆம் ஆத்மியின் முதல் மந்திரி வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

தினத்தந்தி

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. 93 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

பல கருத்துக் கணிப்புகள் ஆம் ஆத்மிக்கு வசதியான வெற்றியைக் கணித்துள்ளன.

பகவந்த் மானை ஆம் ஆத்மி முன்னிறுத்தும்போது, தற்போதைய சரண்ஜித் சன்னியை முதல் மந்திரி வேட்பாளராக கொண்டு காங்கிரஸ் தேர்தலுக்குச் சென்றது.

பாஜக நீண்டகால கூட்டாளியான எஸ்ஏடி(அகாலிதளம்)யுடன் பிரிந்து, பிஎல்சி மற்றும் எஸ்ஏடி (சன்யுக்த்) உடன் கூட்டணியில் போட்டியிட்டது. எஸ்ஏடி(அகாலிதளம்) பிஎஸ்பியுடன் கூட்டணி வைத்தது.

தற்போது வரை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆம் ஆத்மி 85 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், அகாலிதளம் 10 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும் மற்றவை 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பாட்டியாலா தொகுதியில் போட்டிடும் காங்கிரசை விட்டு பிரிந்த முன்னாள் முதல் மந்திரி கேப்டன் அமரீந்தர் சிங்(பிஎல்சி கட்சி) பின்னடைவை சந்தித்து வருகிறார்.

பஞ்சாப் மாநில தற்போதைய முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி சம்கௌர் சாஹிப் மற்றும் பதவுர் என இரண்டு தொகுதிகளில் களம் காணுகிறார். அந்த 2 தொகுதிகளிலும் அவர் பின்னடைவை சந்தித்துள்ளார்.

கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் நவ்ஜோத் சிங் சித்து பின்னடைவை சந்தித்துள்ளார். அவர் அங்கு மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஜலாலாபாத் தொகுதியில் போட்டியிடும் சுக்பீர் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம் தலைவர்) பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோல, லாம்பி தொகுதியில் போட்டியிடும் பிரகாஷ் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம் ) பின்னடைவை சந்தித்துள்ளார்.

பதான்கோட் தொகுதியில் போட்டியிடும் அஸ்வனி குமார் சர்மா (பாஜக) பின்னடைவை சந்தித்துள்ளார்.

துரி தொகுதியில் போட்டியிடும் பகவந்த் மான் ஆம் ஆத்மியின் முதல் மந்திரி வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

84 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்களை நிஜமாக்கும் வகையில் ஆம் ஆத்மி பஞ்சாப் மாநில வரலாற்றில் முதன் முறையாக ஆட்சியை பிடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு