கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

பஞ்சாப்பில் கடும் பனிப்பொழிவு: பள்ளிகள் திறக்கும் நேரம் மாற்றம்

கடுமையான குளிர் பனிப்பொழிவு காரணமாக பஞ்சாப் பள்ளிகள் ஜனவரி 1 முதல் காலை 10 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சண்டிகார்,

பஞ்சாப், அரியானாவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று இயல்பைவிட அதிக பனிப்பொழிவு ஏற்பட்டதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நகரின் முக்கிய பகுதிகளில் அதிகாலை முதல் அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. காலை 8 மணியை கடந்தும் இந்தநிலை நீடித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

இந்தநிலையில் இன்று முதல் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் காலை 10 மணி தொடங்கி மாலை 3 மணி வரை மட்டும் இயங்க பஞ்சாப் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஜனவரி 14-ந் தேதி வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை