தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் முதல்-மந்திரியாக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்பு

உத்தரகாண்ட் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்க உள்ளார்.

தினத்தந்தி

டேராடூன்,

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக பக்வந்த் மான் பதவியேற்றார்.

அதே போல், பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்-மந்திரி வேட்பாளர்கள் அடுத்தடுத்து பதவியேற்று வருகின்றனர். அந்த வகையில் உத்தரகாண்ட் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்க உள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்