மும்பை பேரிவலி பகுதியில் ஆசிரமம் நடத்தி வருபவர் ராதே மா (52). தன்னை துர்கை கடவுளின் மறு அவதாரமாக கூறி வருகிறார். விலை உயர்ந்த ஆடை, தங்க நகைகள் அணிந்து முழு அலங்காரத்துடன் காணப்படுவார். அடிக்கடி சர்ச்சையில் ,சிக்கி கொள்வது இவரது வழக்கம்
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கல்கி மகேத்சவம் விழாவில் பங்கேற்க ராதே மா சென்றுள்ளார். அப்பேது பத்திரிகை நிருபர்கள் அவரிடம் சரமாரியாகக் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் ஆத்திரம் அடைந்தார். பத்திரிகையாளர்களைப் பார்த்து, மரியாதையாக நடந்து கெள்ளுங்கள், வாயை மூடுங்கள், எதற்கும் எல்லை உண்டு. எதற்கு என்னை கெல்கிறீர்கள். என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று ஆத்திரத்தில் கத்தினார். அடிக்கடி இருக்கையை விட்டு எழுந்து சத்தம் பேட்டு பேசினார். அவருடைய சீடர்கள் சமாதானப்படுத்திய பிறகு அவர் அமைதியானார்.
ஒரு கட்டத்தில் பெறுமை இழந்த ராதே மா ஆங்கிலத்தில் சரமாரியாக நிருபர்களிடமே கேள்விகள் எழுப்பினார். தூய பயபக்தி என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அழகு என்பது அவரவர் பார்வையில் உள்ளது என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.