தேசிய செய்திகள்

ரபேல் விமான பேரத்தை தணிக்கை செய்வதில் இருந்து விலக வேண்டும் - அதிகாரிக்கு காங்கிரஸ் நெருக்கடி

ரபேல் விமான பேரத்தை தணிக்கை செய்வதில் இருந்து விலக வேண்டும் என அதிகாரிக்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில் சிபல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போதைய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மெக்ரிஷி, கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி முதல் 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந் தேதி வரை மத்திய அரசின் நிதித்துறை செயலாளராக இருந்தார்.

அந்த காலகட்டத்தில்தான், அதாவது 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்று, ரபேல் ஒப்பந்ததை இறுதி செய்து அறிவித்தார்.

நிதித்துறை செயலாளர் என்ற முறையில், ரபேல் தொடர்பான பேச்சுவார்த்தையில் ராஜீவ் மெக்ரிசி பங்கேற்றுள்ளார். எனவே, அவர் ரபேல் பேரம் குறித்து தணிக்கை செய்வதற்கு உகந்தவர் அல்ல. ஆகவே, ராஜீவ் மெக்ரிஷி, ரபேல் விமான பேரத்தை தணிக்கை செய்வதில் இருந்தும், நாடாளுமன்றத்தில் தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதில் இருந்தும் விலகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...